செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு, ஜூன் 18: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் பயிற்சி டாக்டர் தாக்கப்பட்டார். இதனை கண்டித்து, அனைத்து மாநிலங்களிலும் டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டத்தை அமல்படுத்தக்கோரியும், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க காஞ்சிபுரம் மாவட்ட கிளை, இந்திய மருத்துவர்கள் சங்கம், செங்கல்பட்டு கிளைகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடந்தது. இந்திய மருத்துவ சங்க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். செயலாளர் பாலாஜி முன்னிலை வகித்தார்.  தமிழ்நாடு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் மோகன்குமார், மாநில நிர்வாகிகள் ஜான், வசீகரன், சுந்தர்ராஜன், ஜெயக்குமார், மித்ரன் உட்பட 200க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.டாக்டர்களை தாக்குபவர்கள் மீது பினையில் வர முடியாத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான சட்டம் இயற்ற வேண்டும். தனியார் அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் போராட்டாம் வெடிக்கும் என கோஷமிட்டனர்.

Related Stories: