உடுமலை, அமராவதியில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி துவக்கம்

உடுமலை, ஜூன் 12:  உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் ஆண்டுதோறும் பல்வேறு பருவங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அந்த வகையில், குளிர்கால கணக்கெடுப்பு நேற்று துவங்கியது.  உடுமலையில் 12 பீட், அமராவதியில் 10 பீட்டுகளில் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதில் வன காப்பாளர், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 40 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த முறை தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் இருந்து தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், ‘‘முதல் 3 நாட்கள் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை கணக்கெடுக்கப்படும். இவற்றின் கால்தடம் பதிவு செய்யப்படும். அடுத்த 3 நாட்கள் மான் வகைகள், முள்ளம் பன்றி போன்றவை கணக்கெடுக்கப்படும்.

Related Stories: