கடலூர் முக்கிய சந்திப்புகளில் மீண்டும் தானியங்கி சிக்னல்

கடலூர், ஜூன் 12:  கடலூரில் மீண்டும் முக்கிய சந்திப்புகளில் மறுசீரமைக்கப்பட்ட தானியங்கி சிக்னல்களை மாவட்ட எஸ்பி சரவணன் துவக்கி வைத்தார். கடலூர் மாவட்டத்தின் தலைநகர் என்ற நிலையிலும், கிழக்கு கடற்கரை சாலையின் முக்கிய நகராக அமைந்துள்ள வகையிலும் பல்வேறு முக்கிய சந்திப்புகள் அமைந்துள்ளன. சாலையில் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் சிக்னல்கள் இயக்கம் மாயமாகி இருந்தது. சிக்னல்கள் அமைக்கப்பட்டு இருந்தபோதிலும் இயற்கை சீற்றத்தின் காரணமாக பழுதான நிலையில் பல நாட்களாக செயல்படாமல் கிடந்தது. பொதுநல அமைப்புகள் பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து மாவட்ட காவல்துறை அதனை மறுசீரமைப்பு செய்தது. இந்நிலையில் கடலூர் நகரில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட தானியங்கி சிக்னல்களை நேற்று கடலூர் மாவட்ட எஸ்பி சரவணன் துவக்கி வைத்தார். கடலூரில் சீமாட்டி, உட்லண்ட்ஸ், போஸ்ட் ஆபீஸ், செம்மண்டலம், ஆல்பேட்டை, பச்சையாங்குப்பம் இரட்டைரோடு, கேவி டெக்ஸ் ஆகிய சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் 13 இடங்களில் மிளிரும் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறை மற்றும்கடலூர் மாவட்ட இருசக்கர மோட்டார் வாகனம் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் சார்பில் ஹெல்மெட் அணிவதன் பயன் குறித்து விழிப்புணர்வு பேரணியை எஸ்பி துவக்கி வைத்தார். இதில் டிஎஸ்பி சாந்தி,இன்ஸ்பெக்டர் பால்சுதர், போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜ், போக்குவரத்து கண்காணிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஞானவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: