சத்துணவு பணியாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்

மதுரை, ஜூன் 4: தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், மதுரை கிராம நிர்வாக அலுவலர் சங்க கட்டிடத்தில் நடந்தது. மாநிலச்செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் ஆறுமுகம், மாநில பொதுச்செயலாளர் அயோத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பணிமூப்பு அடிப்படையில் ஆண் சத்துணவு அமைப்பாளருக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு கமிட்டியின் ரெக்கார்டு கிளப் மற்றும் ஜூனியர் அசிஸ்டெண்ட் உத்தரவை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டந்தோறும் உள்ள சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசு பணியாளர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் ஜெய்கணேஷ், மாவட்ட அமைப்பாளர் பாண்டி மற்றும் சங்க நிர்வாகிகள் ஜீவானந்தம், செல்லப்பாண்டி, லலிதா, மாயாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: