மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு சுண்டக்குடி திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

அரியலூர், மே 29: சுண்டக்குடி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே சுண்டக்குடி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தீமிதி திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த ஏப்ரல் 28ம் தேதி கோடியேற்றத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. நேற்று முன்தினம் மாலை தீமிதி விழா நடந்தது. முன்னதாக சுண்டக்குடி மருதையாற்றில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதைதொடர்ந்து செல்லியம்மன் கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் சுண்டக்குடி, கட்டுநாடு  மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: