கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 75 பள்ளிகளுக்கு முதல் பருவ புத்தகங்கள் அனுப்பும் பணி

கும்பகோணம், மே 28: கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு முதல் பருவத்திற்கான  புத்தங்களும், நோட்டுக்களும் வாகனம் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் உள்ள 75 அரசு, நகராட்சி, ஆதிதிராவிடர், சுயநிதி பள்ளிகளில் படிக்கும் 6 ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலுள்ள 45,950 மாணவர்களுக்கும், 10 மற்றும் 12ம் வகுப்பு வரையிலுள்ள 12,050 மாணவர்களுக்கும் புத்தகங்களும், இலவச கையேடுகள், பள்ளி திறக்கும் நாளான ஜூன் 3ம் தேதியன்று வழங்குவதற்காக வாகனம் மூலம் கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலத்திலிருந்து அனுப்பும் பணி நடந்தது. கும்பகோணம் கல்வி மாவட்டத்திலுள்ள 75 பள்ளிகளில் உள்ள 58 ஆயிரம் மாணவர்களுக்கு 2,90,000 நோட்டுக்களும் வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுகுறித்து கும்பகோணம் கல்வி மாவட்ட அலுவலர் பாப்பம்மாள் கூறுகையில், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் உள்ள 75 பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 58 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர்.இதில் 6ம் வகுப்பில் 8,950 புத்தங்களும், 7ம் வகுப்பில் 8,750 புத்தகங்களும், 8 ம் வகுப்பில் 8750 புத்தகங்களும், 9 ம் வகுப்பில் 10,000 புத்தகங்களும்,10ம் வகுப்பில் 9,500 புத்தகங்களும், 11ம் வகுப்பில் 59,000 புத்தகங்களும், 12ம் வகுப்பில் 6,150 புத்தகங்கள் என 58,000 புத்தகங்களும், 2,90,00 நோட்டுக்களும் வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.இந்த புத்தகங்களும், இலவச கையேடுகள், நோட்டுக்கள் அனைத்தும் பள்ளி திறக்கும் நாளான ஜூன் மாதம் 3ம்தேதி மாணவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: