கூத்தாநல்லூர் வடபாதிமங்கலம் மகா மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா ேகாலாகலம்

கூத்தாநல்லூர், மே 21: கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் மகா மாரியம்மன் கோயில் தீ மிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர். கூத்தாநல்லூர் வட்டம் வடபாதிமங்கலம் பகுதியை சேர்ந்த சின்னக்கொத்தூர் அகரக்கொத்தூர் மன்னஞ்சி கிராமத்திற்கு பொதவானது மகா மாரியம்மன், மகா காளியம்மன்,   ஆபத்சகாய வினாயகர் மற்றும் ஹரிஹரபுத்ர ஐயனார் ஆலயம். இந்த ஆலயம் இந்த பகுதியில் பிரசித்தி பெற்றது. மிகவும் சக்திவாய்ந்த இந்த செல்லியம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் வைகாசி பெருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டும் 14வது வைகாசி பெருவிழா சின்னக்கொத்தூர் மகா மாரியம்மன் கோயிலில் வழக்கமான உற்சாகத்தோடு நடைபெற்றது. கடந்த 18ம்தேதி தொடங்கி   நான்கு நட்களாக நடைபெற்ற இந்த திருவிழாவில் தினமும் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று  அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  நேற்று திங்கட்கிழமை  வைகாசி திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக 10ம் ஆண்டு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோயிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் ஏராளமான பக்தர்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்து கைகளில் வேப்பிலையுடனும், தலையில் பால்சொம்புடனும் பூக்குழி இறங்கினர். சக்தி கரக வீதியுலா நிகழ்ச்சியும் கோலாகலமாக நடைபெற்றது. இன்று சக்தி கப்பறை சந்தனகாப்பு அலங்காரம்  நடைபெறும். 23ம் தேதி வரை காவடி எடுத்தல், கஞ்சிவார்த்தல், சந்தனக்காப்பு அலங்காரம், சக்தி கரகம், செல்லியம்மன் வீதியுலா, மஞ்சள் நீராட்டு மற்றும் அன்னதானம் என தொடர் திருவிழாவாக நடைபெறுகிறது.

Related Stories: