வெளிப்பாளையம் ரயில்வே மேடையை உயர்த்த வேண்டும் ஓய்வு அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

நாகை, மே21: வெளிப்பாளையம் ரயில்வே மேடையை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க நாகை தெற்கு மாவட்ட மாநாடு நாகையில் நடந்தது. மாவட்டத் தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். நாகை வட்ட செயலாளர் ராஜாராமன் வரவேற்றார். கபீர்ராஜா மாநாட்டை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் அறிக்கை வாசித்தார். பொருளாளர் முருகேசன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். 21 மாத கால நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு இலவச பஸ் பாஸ் உடனே வழங்க வேண்டும். வெளிப்பாளையம் ரயில்வே நடைமேடையை உயர்த்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இணைச்செயலாளர் சீத்தாராமன் நன்றி கூறினார்.

Related Stories: