பாலபதங்கீஸ்வரர் கோயிலுக்கு திருப்பணி: தொல்லியல் வல்லுநர் ஆய்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் பாலூர் கிராமத்தில்  இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான ஸ்ரீ பாலபதங்கீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாகும். தற்போதுள்ள கோயில் முதலாம் பராந்தக சோழன் கட்டியதாகும். அகத்திய முனிவர், பதங்க முனிவர், மார்க்கண்டேயர், சூரியன் ஆகியோர் இங்கு வந்து வணங்கி அருள் பெற்றுள்ளனர் என்பது ஐதிகம். இக்கோயில் புனரமைக்கப்பட்டு 2005ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்போது கும்பாபிஷேகம் செய்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டது.

எனவே இந்த ஆண்டு கும்பாபிஷேகம் செய்ய ஊர் பெரியோர்கள் கோயில் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். திருப்பணிகளை தொடங்குவதற்கு முன்பாக  முதற்கட்டமாக மத்திய தொல்லியல் வல்லுநர் ஜெயகரன்  நேற்று பாலூர் கோயிலுக்கு வருகை தந்து கோயில் திருப்பணிகள் குறித்து செயல் அலுவலர் செந்தில்குமாருடன் முழுவதுமாக ஆய்வு செய்தார்.

Related Stories: