கருங்குளம் ஒன்றிய பகுதியில் தீவிர பிரசாரம் குளங்கள் தூர்வார நடவடிக்கை

ஓட்டப்பிடாரம், மே 14: குளங்கள் தூர் வார நடவடிக்ைக எடுக்கப்படும் என ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா பேசினார்.

ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா நேற்று கருங்குளம் வடக்கு ஒன்றிய பகுதிக்குட்பட்ட மியாகான்பள்ளி, அனந்தநம்பிக்குறிச்சி, மணக்கரை, அகரம், உழக்குடி, கலியாவூர், காலாங்கரை, விளாத்திகுளம், கோனார்குளம், நானல்காடு, பாறைக்காடு, வல்லநாடு ஆகிய இடங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘கிராமங்களில் சாலை, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
Advertising
Advertising

அடிப்படை வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். குளங்கள் தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால் தற்போதைய ஆட்சியில் பெயரளவுக்கே திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தற்போதைய ஆட்சியால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனை எண்ணிப்பார்த்து திமுகவுக்கு வாக்களித்து தன்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: