முத்துப்பேட்டை இடும்பாவனத்தில் செஞ்சிலுவை சங்க தின விழாவில் மாணவர்களுக்கு உதவி வழங்கல்

முத்துப்பேட்டை, மே 10: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனத்தில் உலக செஞ்சிலுவை சங்க தின விழாவில் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. உலக செஞ்சிலுவை இயக்கத்தை தோற்றுவித்த ஜீன் ஹென்றி டியூனாண்ட்டின் சேவைகளை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் அவரது பிறந்த தினமான மே 8 அன்று உலக ரெட்கிராஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து ஜீன் ஹென்றி டுயூனாண்ட்டின் பிறந்தநாள் மற்றும் உலக ரெட்கிராஸ் தின விழா  முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் சுவாமி விவேகானந்தா கல்வி அறக்கட்டளையில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஜீன் ஹென்றி டுயூனாண்ட் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ரெட்கிராஸ் அமைப்பு தோன்றிய விதம், உலகளாவிய அளவில் நடைபெறும் சேவைகள் பற்றிய கருத்தரங்கமும்  நடைபெற்றது. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு நோட்டுப்புத்தகம்  மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திருவாரூர் ரெட்கிராஸ் கிளையின் நிர்வாகக்குழு உறுப்பினர் கண்ணன், ஜூனியர் ரெட்கிராஸ் முத்துப்பேட்டை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் செல்வசிதம்பரம், விவேகானந்தா கல்வி அறக்கட்டளை நிறுவனர் அய்யப்பன், ஆசிரியர் சிவகுருநாதன், இடும்பாவனம் வர்த்தக சங்க பொதுச்செயலாளர் கவுதமன், கவுரவ செயலாளர் ஷாகுல் ஹமீது உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: