ஆர்எஸ்எஸ்., தலைவர் மோகன் பகவத் ஈரோடு வருகை

ஈரோடு,  மே 7:  கோவை மண்டல ஆர்எஸ்எஸ் வருடாந்திர  பன்முக பயிற்சி கூட்டம் ஈரோட்டில் ஏப்ரல் 27ம் தேதி துவங்கி நடந்து  வருகிறது. இந்த கூட்டத்தில் கோவை மண்டலத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த கூட்டத்தில்  பங்கேற்பதற்காக அந்த அமைப்பின் அகில இந்திய தலைவரான மோகன் பகவத் நேற்று  காலை பெங்களூரூ-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இசட் பிளஸ் பாதுகாப்புடன்  ஈரோடு ரயில்வே ஜங்ஷன் வந்தார். பின்னர் ஈரோடு டவுன் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன்  தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன்  மோகன்  பகவத்தை ஜங்ஷனுக்கு வெளியில் அழைத்து வந்தனர். பின்னர் ரயில்நிலைய  வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி குண்டு துளைக்காத  புல்லட் புரூப் காரில் புறப்பட்டு சென்றார்.

வழியில், ஈரோடு செங்குந்தர் பள்ளிக்கு  வந்துள்ள வடமாநில சுவாமிஜி ஒருவரை சந்தித்தார். பின்னர் ஆர்எஸ்எஸ் பயிற்சி  நடக்கும் இடமான பெருந்துறை ரோட்டில் உள்ள யுஆர்சி பள்ளி  மைதானத்திற்கு சென்றார். அங்கு பயிற்சி பெற்று வரும் ஆர்எஸ்எஸ்  தொண்டர்களிடம் பேசினார். ஈரோடு எஸ்பி ஆய்வு  ஆர்எஸ்எஸ் பயிற்சி  கூட்டம் நடைபெறும் இடத்தில் மோகன் பகவத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்  முறையாக உள்ளனவா? என ஈரோடு எஸ்பி., சக்தி கணேசன் நேரில் சென்று, பள்ளி  மைதானம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டார்.  தொடர்ந்து 24 மணி நேரமும் டிஎஸ்பி.,க்கள் தலைமையில் பாதுகாப்பு பணி  மேற்கொள்ள உத்தரவிட்டார்.

Related Stories: