காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி அர்த்தஜாமபூஜை

திருவையாறு, ஏப்.28:  திருவையாறு அடுத்த வைரவன்கோவிலில் கிராமத்தில் கால பைரவர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினங்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். \அர்த்தஜாமபூஜையில் கலந்துகொண்டால் வியாதிகள் நீங்கும், திருமண தடை  நீங்கும், புத்திரபாக்கியம் கிட்டும், பைரவரை அஷ்டமி திதியிலும், திருவாதிரை நட்சத்திரத்திலும் ஞாயிறு,  வியாழக்கிழமை உச்சிகாலத்திலும் வணங்குவதால் நல்ல பன்தரும் என்பது ஐதீகமாகும்.நேற்று கால பைரவருக்கு மரிக்கொழுந்து அலங்காரமும், தயிர் அபிஷேகமும் நடைபெற்றது.

அதை தொடர்ந்து யாகசாலைபூஜை தொடங்கி, விநாயகர்பூஜை, சொர்ஆதாஸ்ன பைரவர் பூஜை, 108 வலம்புரி சங்குபூஜை, பைரவர் காயத்திரிமந்திரம், அஷ்ட பைரவர் காயத்திரி மந்திரபூஜை செய்யப்பட்டு கடம் புறப்பட்டு மூலவருக்கு 108 சங்காபிஷேகமும், கலாபிஷேகம், தயிர்பாயம் படையல் போட்டு 108 வடைமாலை சாத்தி அர்ச்சனை செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்று பக்தர்களுக்கு தயிர்சாதம், புளிதாசனம், சர்க்கரை சாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா;கள் கலந்துகொண்டு காலபைரவரை வழிப்பட்டு சென்றனர். இந்த அர்த்த ஜாமபூஜை ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியில் இரவு நடைபெறுகிறது.

Related Stories: