அய்யம்பேட்டையில் தீ விபத்து நிவாரண உதவி

 

கும்பகோணம், ஜூன் 21: கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக அரசின் நிவாரண உதவிகளை எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சி பாரதிதாசன் தெருவில் வசிப்பவர் பாபுராஜ் மனைவி சாந்தி. இவரது கூரைவீடு நேற்று முன்தினம் மாலை எதிர்பாராதவிதமாக தீயில் எரிந்து நாசமானது.

தகவலறிந்த பாபநாசம் தாசில்தார் மணிகண்டன், எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, பேரூர் திமுக செயலாளரும், வழக்கறிஞருமான துளசிஅய்யா , பேரூராட்சி தலைவர் புனிதவதி குமார், துணைத்தலைவர் அழகேசன், ம.ம.க நகர தலைவர் வாலன் சுலைமான் பாட்சா ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, தமிழக அரசின் சார்பில் நிவாரண பொருட்கள் மற்றும் ரொக்க பணம் வழங்கினர். இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் லதா செல்வம், பேரூராட்சி செயல் அலுவலர், அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

The post அய்யம்பேட்டையில் தீ விபத்து நிவாரண உதவி appeared first on Dinakaran.

Related Stories: