தஞ்சாவூரில் செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்

 

தஞ்சாவூர், ஜூன் 21: தஞ்சாவூரில் செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் நாளை (22ம் தேதி) தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் செல்லப் பிராணிகள் வளர்க்கும் பொது மக்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி தஞ்சாவூரை அடுத்த மாதாக்கோட்டை சாலையில் இயங்கி வரும் பிராணிகள் வதை தடுப்பு சங்க கட்டிட வளாகத்தில் நாளை (22ம் தேதி) இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற உள்ளது.

இந்த முகாம் நாளை காலை 9 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெறுகிறது. முகாம் வருகிற 24ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. முகாமில் செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. எனவே தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் செல்லப் பிராணிகள் வளர்ப்போர் தங்களின் செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி மருந்தினை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக கலெக்டர் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

The post தஞ்சாவூரில் செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: