அடையாள அட்டை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

 

கும்பகோணம், ஜூன் 19: கும்பகோணம் பல்நோக்கு சமூக சேவை மைய வளாகத்தில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் கும்பகோணம் ரெட்கிராஸ் துணை சேர்மன் ரொசாரியோ ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், கண், காது மூக்கு தொண்டை மருத்துவர், மனநல மருத்துவர் கொண்ட குழு மூலமாக மருத்துவ பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இம்முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் 75 யூடிஐடி கார்டுகளுக்கான விண்ணப்பம் பெறப்பட்டது. இம்முகாமில் கும்பகோணம் ஹெரிடேஜ் லயன் சங்க தலைவர் நரசிம்மன், செயலாளர் பாஸ்கரன், கிருஷ்ணன் மற்றும் ரோட்ராக்ட் கிளப் ஆஃப் காட் சிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள், ராஜா, மாற்றுத்திறனாளிகள் நல சங்க தலைவர் அன்புமணி, கும்பகோணம் ரெட்கிராஸ் உறுப்பினர்கள் சிவகுமார், ராமதாஸ், பாலசுப்பிரமணியன், மாற்றுத்திறனாளிகள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post அடையாள அட்டை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: