கும்பகோணம் அருகே சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

 

கும்பகோணம், ஜூன் 21: கும்பகோணம் அருகே சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர் யோகாசனங்கள் செய்து அசத்தினர். கும்பகோணம் அருகே கொரநாட்டுகருப்பூர் புறவழிச்சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பல்வேறு யோகா ஆசனங்களை செய்து அசத்தினர்.

மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைந்த இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் யோகாசனத்தின் முக்கியத்துவத்தை பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், ஆசிரிய ஆசிரியைகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கும்பகோணம் அருகே சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: