இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முத்துப்பேட்டையில் தனக்கு அதிக ஓட்டு விழும் மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் இந்திய கம்யூ. வேட்பாளர் அதிர்ச்சி

முத்துப்பேட்டை, ஏப். 19: முத்துப்பேட்டையில் தனக்கு அதிகளவில் ஓட்டுகள் விழும் வாக்கு சாவடி மையத்தில் மிஷின் பழுதடைந்ததால் அதிர்ச்சி அடைந்த இந்திய கம்யூ. வேட்பாளர் செல்வராஜ் நீண்டநேரம் அமர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் அதிகளவில் இஸ்லாமியர்கள் வாக்குகள் உள்ளது. இந்நிலையில் இங்கு  உள்ள மிஷின் காலை துவக்கத்தில் பழுதடைந்ததால் சம்பவ இடத்திற்கு வந்த நாகை மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ் இங்குள்ள பெரும்பாலான வாக்குகள் தனக்கு விழவேண்டியது என்பதை அறிந்து போக மனமில்லாமல்  நீண்டநேரம் பூத்துக்குள் அமர்ந்து வேறு மிஷின் கொண்டு வருவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஒருவழியாக சுமார் 5 மணி நேரம் கழித்துதான் இங்கு மாற்று மிஷின் கொண்டு வரப்பட்டு வாக்கு பதிவு நடந்தது.

பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ், “இந்த புதுத்தெரு பள்ளியில் 3 வாக்கு சாவடி உள்ளது. இங்கு சிறுபான்மை இனத்தவர்கள் அதிகம். அவர்களது வாக்கு பதிவை சீர்குலைக்கும் நோக்கத்தில் திட்டமிட்டு மிஷின் பழுது நடந்துள்ளதா, செயற்கையாக நடந்துள்ளதா என்பது தெரியவில்லை. எங்களுக்கு அதிகம் வாக்குகள் கிடைக்கவேண்டிய பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு தெரிவித்து விட்டு சென்றார்.

Related Stories: