பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் காலதாமதம் தேர்தல் பார்வையாளரிடம் சிபிஎம் புகார்

தேனி, ஏப். 5: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனிமாவட்ட செயலாளர் வெங்கடேசன், மக்களவை தொகுதி தேர்தல் பார்வையாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேனி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தேனி மாவட்டம் முழுவதும் தெருமுனைக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.போடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிலமலையில் கடந்த 3ம் தேதியும், ராசிங்காபுரத்தில் ஏப்ரல் 4ம் தேதியும், சில்லமரத்துப்பட்டியில் ஏப்ரல் 5ம்தேதி தெருமுனைக்கூட்டம் நடத்த இணையதளம் வழியாக கடந்த 1ம் தேதி விண்ணப்பித்தோம். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. போடி சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும்அலுவலர் அலுவலகத்திற்கு சென்று, அங்கு ஒரு படிவம் கொடுத்து அதனை பூர்த்தி செய்து தந்தால் அனுமதி கொடுப்போம் என்றனர். அதன்பிறகு போடி டிஎஸ்.பியை சந்தித்து அனுமதி பெற வேண்டும் என்றனர். பொதுக்கூட்டம் நடத்த வேண்டிய நாட்கள்வந்தபோதும் அனுமதி தரவில்லை. போடி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் போடி தாலுகா அலுவலகத்தில் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் அவர், தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைப்பதும், அலைக்கழிப்பதும், போலீசாரின் அனுமதி பெற வேண்டும் என காலம்கடத்துவமாக எங்களின் தேர்தல் பிரச்சாரத்தை முடக்கி வருகின்றனர். எனவே, தேர்தல் பார்வையாளர் தலையிட்டு பொதுக்கூட்டம், பிரச்சாரம், தெருமுனைக்கூட்டங்கள் நடத்துவதற்கு காலதாமதமின்றி அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.

Related Stories: