கரம்பயம் கிராம காங்கிரஸ் கமிட்டி கூட்டம்

பட்டுக்கோட்டை, மார்ச் 28: பட்டுக்கோட்டை அடுத்த கரம்பயம் கிராமத்தில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடந்தது. கரம்பயம் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாலு, தனபால் தலைமை வகித்தனர். தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட விவசாய பிரிவு ஞானபிரகாசம் முன்னிலை வகித்தனர்.

 கூட்டத்தில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி கூட்டணி கட்சியின் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கத்தை ஆதரித்து இணைந்து செயல்படுவது. திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கத்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார காங்கிரஸ் தலைவர் காசிநாதன், தஞ்சை மாவட்ட செயலாளர் கோவிசெந்தில், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அக்கரைச்செல்வன் பங்கேற்றனர்.

Related Stories: