கூத்தாநல்லூர் ஜமாலியாத் தெருவில் எரிக்கப்படும் குப்பைகளால் சுகாதாரசீர்கேடு மக்கள் குற்றச்சாட்டு

கூத்தாநல்லூர்,மார்ச்26: கூத்தாநல்லூர் நகராட்சியின் பிரதானசாலையான ஜமாலியாத்தெருவில்குப்பைகளைஅள்ளாமல்,எரித்துவிடப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கூத்தாநல்லூர் ஜமாலியாத்தெருநகராட்சியின் பிரதான தெருக்களில் ஒன்றாகும்.இந்தசாலையில்தான் கூத்தாநல்லூர் ஆண்கள்மேல்நிலைப்பள்ளியும் நூற்றுக்கும் மேற்பட்டவீடுகளும் அமைந்துள்ளன. இந்த தெருவில் தெரு வாசிகளால் வெளியேற்றப்படும் குப்பைகள்தினசரி நகராட்சி லாரிகள் மூலம் எடுத்துச்செல்லப்படுவது வழக்கம்.

கடந்த சில நாட்களாக குப்பைகளைஅள்ள லாரிவர வில்லை. இது குறித்து நகராட்சிநிர்வாகத்திடம் புகார் செய்யப்பட்ட நிலையில்நகராட்சியிலிருந்துவந்தசுகாதாரப்பணியாளர்கள்குப்பைகளை அள்ளாமல்அதனைஎரித்துவிட்டு சென்றிருப்பதாககூறப்படுகிறது. இதனால்அந்தபகுதியேபுகைசூழ்ந்து மூச்சுத்திணறல்ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். எனவே இது போன்ற செய்யாமல் குப்பைகளை அள்ளிச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூகஆர்வலர் பீர்முகம்மது கூறுகையில் இனியாவதுதினமும் நகராட்சிநிர்வாகம் குப்பைவண்டிகளைஅனுப்பி குப்பைகளைஅள்ளவேண்டும்  என்றார்.

Related Stories: