வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டுவிழா

நாகர்கோவில், மார்ச் 26: நாகர்கோவில் சுங்கான்கடை, வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்செலன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் 4வது ஆண்டு விழா நடைபெற்றது.

மாணவி ஜோசிகா வஷினி வரவேற்று பேசினார். வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகி சரோஜா வின்சென்ட் மற்றும் பள்ளி செயலாளர் கிளாரிசா வின்சென்ட் குத்து விளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தனர். முதல்வர் லதா ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பள்ளி நிறுவனரும், முன்னாள் எம்பியுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமையுரையாற்றினார். சர்வதேச அளவில் ஆங்கில ஒலிம்பியாட் தேர்வில் தொடர்ந்து 2 ஆண்டுகள் ரேங்க் ேகால்டராக வெற்றி பெற்ற 7ம் வகுப்பு மாணவன் ஆதில் பெலிக்ஸ், மாநில செஸ் போட்டியில் வெற்றி பெற்ற 4ம் வகுப்பு மாணவன் ஜெய்வந்த், மாநில ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற 8ம் வகுப்பு மாணவன் லோகேஷ், மாநில யோகா போட்டியில் வெற்றி பெற்ற 4ம் வகுப்பு மாணவன் பபின்குமார் ஆகியோருக்கு பள்ளி தலைவர் நாஞ்சில் வின்சென்ட் கேடயமும், பதக்கங்களும் வழங்கி கௌரவித்தார்.

டாக்டர் பெலிக்ஸ் வகுப்பு வாரியாக முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கோப்பையும், பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார்.இதனை தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள், இந்திய தேசத்தின் பாதுகாப்பிற்காக தம் இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூறும் பொருட்டு மாணவர்களின் மௌன நாடகம், இயற்கையை காப்போம் என்ற நாட்டிய நாடகமும் நடைபெற்றது. மாணவன் ஷாகில் ஷா நன்றி கூறினார்.

Related Stories: