மின் வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: மின் பொறியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் பேட்டி

கன்னியாகுமரி, ஜூன் 25: தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கத்தின் 56வது மாநில 2 நாள் பொதுக்குழுக் கூட்டம் கன்னியாகுமரியில் தொடங்கியது. கூட்டத்துக்கு மாநில பொதுச்செயலர் சம்பத் குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆர்.முருகன், கே.இசக்கிப்பாண்டி, ஆர்.எஸ்.சுமன்ராஜ், கே.எஸ்.வினுகுமார், கே.ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பிறகு மாநில பொதுச்செயலர் சம்பத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது : மின் நிலையங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

தொடக்க நிலை பணியை பட்டய பொறியாளர்களைக் கொண்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்நுட்ப உதவியாளர் காலி பணியிடங்களை அரசும், வாரியமும் நிரப்ப வேண்டும். அரசின் அத்தனை கொள்கை முடிவுகளையும் நேரடியாக பொதுமக்களிடத்தில் கொண்டு செல்கிற பிரிவு பணிகளில் கிட்டத்தட்ட 300க்கு மேல் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். களப்பணியாளர்களையும், தொழில்நுட்ப உதவியாளர்களையும் நியமிப்பதில் அரசும், வாரியமும் தனிக்கவனம் செலுத்தி நிரப்ப முன்வர வேண்டும் என்றார்.

The post மின் வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: மின் பொறியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: