175 ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

நாகர்கோவில், ஜூன் 26: கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டார வள மையம் சார்பில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2024 – 25 ம் கல்வியாண்டின் முதல் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஆனது 175 ஆசிரியர்களுக்கு நாகர்கோவில் டதி மேல்நிலைப்பள்ளி மற்றும் சுசீந்திரம் எஸ் எம் எஸ் எம் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு மையங்களில் நடைபெற்று வருகிறது. வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுனர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். பள்ளிக்கல்வியின் தொடக்கக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். கடந்த கல்வியாண்டில் செப்டம்பர் மாதம் நடந்த அவைவுத்தேர்வு அடிப்படையிலும், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் வாயிலாக மாணவர் திறனில் எவ்வாறு மாற்றம் நடந்துள்ளது, பின்தங்கியுள்ளனரா, அவர்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர். கதை, பாடல் மற்றும் தொழில்நுட்ப வழியாக பாடங்களை நடத்தும் முறைகள் தொடர்பாக விளக்கப்பட்டது.

The post 175 ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: