அச்சக உரிமையாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

பேராவூரணி, மார்ச் 21: பேராவூரணி காவல் நிலையத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருமண மண்டபம், விடுதி, ஒலிபெருக்கி நிலைய உரிமையாளர்கள், வாகன ஓட்டுநர்கள், அச்சகம் மற்றும் பிளக்ஸ் நிறுவன உரிமையாளர்களின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர் பரமானந்தம் தலைமை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் அருள்குமார் முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைவரும் செயல்பட வேண்டும். மண்டப உரிமையாளர்கள் வாடகைக்கு விடும் முன்பாக காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது. வாகனங்கள் அனுமதி பெற்ற பின்னரே இயக்க வேண்டும். துண்டு பிரசுரங்களில், அச்சக பெயர், தொலைபேசி எண் போன்ற விபரங்களை கட்டாயம் குறிப்பிட வேண்டுமென உத்தரவு பிறக்கப்பட்டது.

Related Stories: