நாகை கலெக்டர் அலுவலகத்தில் முன்னறிவிப்பு ஏதுமின்றி இ சேவை மையம் மூடல் பொதுமக்கள் தவிப்பு

நாகை, மார்ச் 21: நாகை கலெக்டர் அலுவலகத்தில் முன்னறிவிப்பு ஏதுமின்றி இ சேவை மையம் திடீரென மூடப்பட்டதால் சான்றுகள் பெற வந்த பொதுமக்கள் தவிப்படைந்தனர். நாகை மாவட்டத்தில் இ சேவை மையம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் நாகை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த இசேவை மையத்தில் தினமும் பொதுமக்கள் பட்டா மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை பெற,  திருமண உதவித் திட்டம் பெற, மகப்பேறு உதவி பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் பெற இ சேவை மையத்தை அனுகி எளிதாக பெற்று வருகின்றனர். இந்த இ சேவை மையத்தில்  பணியாற்றும் ஊழியர் நேற்று விடுமுறை எடுத்ததால் எந்தவித முன்னறிவிப்பு இன்றி திடீர் என மூடப்பட்டிருந்தது.  

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அருகே உள்ள நாகை பால்பண்ணைச்சேரி, நாகூர் மற்றும் திருமருகல் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் நாகை கலெக்டர் அலுவலகத்தல் உள்ள இ சேவை மையத்தால் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்றும் வழக்கம்போல் ஏராளமானவர்கள் இ சேவை மையத்திற்கு வந்தனர். ஆனால் இ சேவை மையம் முன்னறிவிப்பு இன்றி பூட்டப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மாவட்ட நிர்வாகம் இ சேவை மையம் வேலை நாட்களில்  ஊழியர்கள் விடுப்பு எடுத்தால் வேறு பணியாளர்களை கொண்டு தொடர்ந்து இ சேவை மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: