லெட்சுமாங்குடி- திருவாரூர் சாலையோரம் சாக்கடை கழிவு நீர் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம்

கூத்தாநல்லூர்,மார்ச்20: கூத்தாநல்லூரில் ெலட்சுமாங்குடி-பிரதானசாலையின்ஓரம் வாய்க்கால்போலதேங்கிக்கிடக்கும் சாக்கடைகழிவு நீரோடையை தூய்மைப்படுத்திதரவேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  ெலட்சுமாங்குடி-திருவாரூர் பிரதான சாலை ஓரமாக ,பேருந்துநிலையம் செல்லும் வழியில்பாத்திமாபீவிமதரசா நுழை வாயில் அருகில் சாக்கடை கழிவுநீர் ஓடைபோல நீண்டதூரத்திற்கு தேங்கிக்கிடக்கிறது. அதன் துர்நாற்றம் அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கும் , சாலையில்பயணிக்கும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளுக்கும் சுகாதாரசீர்கேட்டைஏற்படுத்துவதுடன் பள்ளி குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அங்குள்ளவியபாரிகளும் குடியிருப்புவாசிகளும் கூறுகையில்இந்தசாக்கடைகழிவுஓடையின் துர்நாற்றத்தால் இந்த இடத்தை கடக்கும்போது மூக்கைபிடித்துக்கொண்டுதான் போக வேண்டியுள்ளது. இந்த ஓடையை முறையாக தூர்வாரி கழிவுநீரை தேங்காமல் ஓடச்செய்தலேஇந்தசாக்கடைதூர்நாற்றம் போகும். அதற்குநகராட்சிநிர்வாகம் உடனடியாகநடவடிக்கைஎடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: