தேர்தல் விதிமுறைகள் மீறில் அகற்றப்படாத அதிமுக கொடி கம்பம்

செங்கல்பட்டு, மார்ச் 19:  செங்கல்பட்டில் தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுக கொடி கம்பம் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி கொடி கம்பங்கள், பேனர்கள், கல்வெட்டுகள் பெயர் பலகைகள் ஆகியவை அரசு ஊழியர்களால் அகற்றப்படுகின்றன.இந்நிலையில் செங்கல்பட்டு நகராட்சிக்கு உபட்ட ராட்டிண கிணறு எல்ஐசி அலுவலகம் அருகில் ஆளுங்கட்சியின் சார்பில் வைக்கப்பட்டுள்ள ராட்சத கொடி கம்பம் மட்டும் இதுவரை அகற்றப்படாமல் உள்ளது. இதில் அதிமுகவின் தேர்தல் சின்னம் இரட்டை இலை பகிரங்கமாக தெரியும் வகையில்உள்ளது.

மாவட்ட நிர்வாகம் அனைத்து கொடி  கம்பங்களையும் அகற்றியபோதும், மேற்கண்ட பகுதியில் உள்ள ஆளுங்கட்சியின் கொடி கம்பத்தை மட்டும் அகற்றாமல் இருப்பது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். உடனடியாக செங்கல்பட்டு ஆர்டிஓ, நகராட்சி ஆணையர் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் உள்ள கொடி கம்பத்தை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: