கலெக்டர் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

தேனி, மார்ச் 12: நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளதையடுத்து தேனி கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பல்லவிபல்தேவ் தலைமையில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் தேர்தல் பொறுப்பு அலுவலர்கள், பறக்கும்படை கண்காணிப்புக் குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு அலுவார்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலெக்டர் பல்லவிபல்தேவ் பேசுகையில், தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ஏப்.18ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளதையடுத்து, 19ம் தேதி முதல்  26ம் தேதி வரை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து வேட்புமனுக்கள் பெறப்படும். 27ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 28ம்தேதி வேட்புமனுக்கள் திரும்ப பெறுதலுக்கான வாய்ப்பும் அளிக்கப்பட உள்ளது. இதனையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதையடுத்து, வருகிற ஏப்.18ம் தேதி வாக்குப்பதிவும், மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கையும்ட நடக்க உள்ளது. தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் பொதுமக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலுமின்றி நடத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

சட்டப்புறம்பான நடவடிக்கைகளை தடுத்திடவும், எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காதபடி, தேர்தல் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். பறக்கும் படையினர் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாகனத்தில் ஐபிஆர்எஸ் கருவி பொதுத்தப்பட்டு துணை வட்டாட்சியர் அல்லது துணை வட்டார அலுவலர்கள் நிலை ஒரு அலுவலரும், ஒரு போலீஸ்காரரும், வீடியோ ஒளிப்பதிவாளர் ஒருவருமாக இணைந்து பணியாற்ற வேண்டும். நிலைக்கண்காணிப்புக் கழு அலுவலர்கள் தங்களுக்கு  பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதியில் வரும் வாகனங்களை பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி அச்சுறுத்தாதபடி, எளிய முறையில சோதனை செய்ய வேண்டும். வீடியோ கண்காணிப்பு குழுவினர்கள் அரசியல் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நடத்தும் கூட்டங்கள், பேரணிகள் மற்றும் பிரசாரங்களை ஒளிப்பதிவு செய்து சிடிக்களாக தயாரித்து அதனை தினமும் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். இக்கூட்டத்தில், மாவட்ட போலீஸ் எஸ்.பி பாஸ்கரன், டிஆர்ஓ கந்தசாமி, உதவி ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: