சார்பதிவாளர் அலுவலகத்தில் நகல் எடுக்கும் கருவி பழுதால் பத்திரம் பெறுவதில் தாமதம் கந்தர்வகோட்டை மக்கள் கடும் அவதி

கந்தர்வகோட்டை, பிப்.28: கந்தர்வகோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் நகல் எடுக்கும் கருவி பழுதால் பத்திர நகல்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கந்தர்வகோட்டையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தற்போது ஆன்லைன் முறையில் பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அலுவலகம் முழுவதும் கண்காணிப்பு காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அலுவலக பணிகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் மாற்றப்பட்டுள்ளது.இந்நிலையில் சில நாட்களாக பத்திர நகல் எடுக்கும் கருவி பழுதடைந்துள்ளதால் பத்திர நகல்கள் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பத்திர நகலுக்கு விண்ணபித்துவிட்டு தினந்தோறும் காத்திருந்து திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சார் பதிவாளர் அலுவலக பதிவாளர் கருணாநிதியிடம் கேட்டப்போது அலுவலகத்தில் தற்போது அனைத்தும் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. நகல் எடுக்கும் கருவி பழுதடைந்துள்ளதை ஆன்லைனில் சென்று புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை சரிசெய்யப்படவில்லை. விரைந்து பழுது சீர்செய்யப்படும் என்றார்.

Related Stories: