சாத்தான்குளத்தில் சைவ வேளாளர் சங்க செயற்குழு கூட்டம்

சாத்தான்குளம், பிப். 27: சாத்தான்குளத்தில்  சைவ வேளாளர் சங்க வட்டார செயற்குழு கூட்டம் நடந்தது. சாத்தான்குளத்தில் சைவ வேளாளர் சங்கம் சார்பில் வட்டார அளவிலான செயற்குழு  கூட்டத்துக்கு செயற்குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் தலைமை வகித்தார். சுடலைமுத்து முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் முருகன் வரவேற்றார். கூட்டத்தில்  பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு கல்வி வேலை வாய்ப்பில்  10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய பிரதமருக்கும், விரைவாக அரசாணை வெளியிட்ட மத்திய அரசிற்கும் நன்றி தெரிவித்தும், காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தற்கொலைபடை தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், சாத்தான்குளம் அரசு போக்குவரத்து பணிமனையில் கூடுதல் பஸ் வசதியுடன் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதில் துணைத்தலைவர்  ஜெயபிரகாஷ்நாராயணன், அமைப்பாளர் வெங்கடாச்சலம், பொருளாளர் அழகப்பன், துணைச் செயலாளர் சுந்தர், செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், கோபாலகிருஷ்ணன், ஜோதி தண்டாயுதபாணி,மீனாட்சிசுந்தரம்,பொன்னம்பலம், முருகன், சுப்பிரமணியன், பழனிபெருமாள், நம்பிராஜன், சுயம்புராஜன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். சங்க வட்டாரத் தலைவர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Related Stories: