வேலாயுதபுரத்தில் முப்பெரும்விழா

 

சாத்தான்குளம், மே 29: சாத்தான்குளம் அருகே சிதம்பராபுரம் பங்கினைச் சார்ந்த வேலாயுதபுரம் லூர்து அன்னை கெபியில் மே வணக்க மாதக் கொண்டாட்டம் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆலய பங்குத்தந்தை இருதயசாமி சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். அருட் சகோதரிகள் இனிதா, லீமாரோஸ் உள்ளிட்டோர் உலக மக்கள் நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். தொடர்ந்து நடந்த திருப்பலியின் நிறைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன. இதைத்தொடர்ந்து சமபந்தி அசன விருந்து நடந்தது.

விழாவில் ஓய்வுபெற்ற ஆசிரியர் மரிய ஜெபமணி, எட்விக் மேரி, அமலா ஓய்வுபெற்ற மின்வாரிய பொறியாளர் பாக்கியராஜ், ஆசிரியர்கள் விமலா, அபிநயா, பட்டுராஜ், நிவேதா பக்தசபை உறுப்பினர்கள் செந்தில்வேல், ராபின்சன், ராஜேஷ், சசிகலா, செல்வராணி, செல்வ சரோஜா, ஜெனிட்டா மேரி, மெர்சி, குயின்ரோஸ், பொன்னரசி, கிருபா, சூரியன், சித்திரை, ஜெபஸ்டின், ஹேரிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பங்குத்தந்தை இருதயசாமி தலைமையில் தொழிலதிபர் பரஞ்ஜோதி செல்வராஜ், ஆசிரியர் செல்வராஜ் செய்திருந்தனர்.

The post வேலாயுதபுரத்தில் முப்பெரும்விழா appeared first on Dinakaran.

Related Stories: