பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

 

ஸ்பிக்நகர், மே 27:ஸ்பிக்நகர் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். ஸ்பிக்நகர் அருகேயுள்ள அத்திமரப்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அர்ச்சனா(51). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காட்டுராஜா மகன் காமேஷ் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் அர்ச்சனாவையும் அவருடைய மகன் பாக்யராஜையும் காமேஷ் மற்றும் அவருடைய தம்பி கணபதி சேர்ந்து தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த அர்ச்சனா, பாக்கியராஜ் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கணபதியை கைது செய்தனர். காமேஷை தேடி வருகின்றனர்.

The post பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: