நாகையில்புதிய பேருந்து சேவை அமைச்சர் துவக்கி வைத்தார்

நாகை. ஜன.11: நாகை புதிய பேருந்து நிலையத்தில், புதிய பேருந்து சேவையை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்.நாகையில் அரசு போக்குவரத்து கழக நாகை மண்டலத்திற்கு ஒதுக்கப்பட்ட 15 புதிய பேருந்துகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நாகை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாகை கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். நாகை எம்எல்ஏ தமிமுன்அன்சாரி, அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் தசரதன் ஆகியோர் முன்னிலை வகித்தார். கோட்ட மேலாளர் செந்தில்குமார் வரவேற்றார். புதிய பேருந்துகளை கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொறையார் பணிமனையில் இரவு ஓய்வெடுத்தபோது கட்டிடம் இடிந்து இறந்த ஊழியர் குடும்பத்திற்கு, பொங்கல் விடுமுறை முடிந்த பின் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக துணை மேலாளர்கள் சிதம்பரகுமார், பாலசுப்பிரமணியன், செந்தில்குமார், சிக்கல் தொடக்க கூட்டுறவு வங்கி தலைவர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: