மணப்பாட்டில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்கம் கலெக்டரிடம் மனு

நாகர்கோவில், நவ.27: ஆதி திராவிடர் முன்னேற்ற இயக்கம் சார்பில் அதன் நிறுவன தலைவர் ஜாண் விக்டர்தாஸ், மாநில செயலாளர் தியாகராஜன், சிறுபான்மைப்பிரிவு செயலாளர் நவாஸ்கான், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வம், மாவட்ட மீனவரணி தலைவர் ஆன்றனி சேவியர், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் ரமேஷ் ஆகியோர் கலெக்டரிடம் அளித்த மனு:

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு பகுதியில் 1,200 குடும்பங்கள் மீன்பிடி ெதாழில் செய்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக கடல் பகுதியில் மணல் குவியல் ஏற்பட்டு தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது ஜேசிபி மூலம் மணல் குவியல் மாற்றப்பட்டு வருகிறது. இப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய வசதியாக தமிழக அரசு தூண்டில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. குமரி மாவட்ட கலெக்டர் வழியாக தமிழக அரசின் கவனத்திற்கு கோரிக்கையை கொண்டு செல்லும் வகையில் மனு அளித்திருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: