பொருட்கள் வழங்காததை கண்டித்து கூட்டுறவு பண்டகசாலையை பொதுமக்கள் முற்றுகை

போடி, அக் 12: போடியில் கூட்டுறவு பண்டகசாலையின் சார்பில் நகரில் உள்ள 33 வார்டுகளில் 27 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன்கடை ஊழியர்களில் பணியாற்றியவர்களில் பாதி பேர் பணி ஓய்வில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அனுபவம் இல்லாத 20க்கும் மேற்பட்டவர்களை ரேஷன்கடைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக தினக்கூலி அடிப்படையில் ஊழியர்களும் வேலை செய்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு கடைகளிலும் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இதனால் கடை ஊழியர்களுக்கும், குடும்ப அட்டை வைத்திருப்போருக்கும் அடிக்கடி தகராறு நடக்கிறது. இந்நிலையில் அதிக விலை கொடுத்து ரேஷன் அரிசி, பருப்பு, பாமாயில்உள்ளிட்ட பொருட்களை வெளிமார்க்கெட் கள்ளச்சந்தை வியாபாரிகள் ெமாத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.

இதற்கு கடை ஊழியர்கள் துணைபோவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடையில் பொருட்கள் வழங்காதது குறித்து தேனி சிஎஸ்ஆருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ேரஷன்கடையில் பொருட்கள் சரியாக விநியோகம் செய்யாததை கண்டித்து புதூர் பொதுமக்கள் போடி கூட்டுறவு பண்கசாலையை முற்றுகையிட்டனர். இதனால் சம்பந்தப்பட்ட கடை ஊழியரை சிஎஸ்ஆர் கண்டித்துள்ளார். அந்த ஊழியர் அலுவலகத்திலிருந்து கீழே வந்தபோது அவரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அவர் பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அதிகாரிகளையும் சத்தம் போட்டதால் தகராறாக மாறியது. இதுகுறித்து இருதரப்பிலும் போடி நகர் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. இருதரப்பினரையும் அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில் சிஎஸ்ஆரால் ஊழியருக்கு ஏற்பட்ட பிரச்னையால் பாதிக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டதால் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

Related Stories: