பாரதிதாசன் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

ஈரோடு: ஈரோடு பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் தாவரக் குழுமங்களின் மருத்துவ குணங்கள் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. பாரதிதாசன் கல்வி நிறுவனத் தலைவர் பெரியசாமி தலைமை தாங்கி பேசினார். முதல்வர் ராமமூர்த்தி துவக்க உரையாற்றினார். பொருளாளர் வி.ஆர்.முருகன், இணைச்செயலாளர்கள் வசந்திசத்யன், பரிமளாராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். பேராசிரியர் தனலட்சுமி சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.

சிறப்பு விருந்தினர்களாக தென்கொரியா நாட்டின் குயிங்ஹீ பல்கலை கழகத்தைச் சேர்ந்த மருந்தியல் மற்றும் நச்சியல் துறை பேராசிரியர் சங்ஜின்கிம், நாமக்கல் கந்தசாமிகவுண்டர் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் சேதுராமன் ஆகியோர் நீரிழிவு நோய் பற்றியும், கட்டுப்படுத்துவது பற்றியும் சிறப்புரையாற்றினர். முடிவில் நுண்ணுயிரியல் துறை தலைவி போராசிரியர் மஞ்சு நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை உயிர்வேதியியல் மற்றும் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

Related Stories: