வாலாஜாபாத் - உள்ளாவூர் ஊராட்சியில் மகளிர் சுயஉதவி கட்டிடத்தில் இயங்கும் ரேஷன்கடை: புதிய கட்டிடம் கட்ட வலியுறுத்தல்

வாலாஜாபாத், ஆக,14: வாலாஜாபாத் ஒன்றியம் உள்ளாவூர் ஊராட்சியில் மகளிர் சுய உதவி கட்டிடத்தில் இயங்கும் ரேஷன் கடையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம் உள்ளாவூர் ஊராட்சி உள்ளது. இதில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம், மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், ரேஷன் கடை, கால்நடை மருந்தகம், ஊராட்சி மன்ற கட்டிடங்கள் உள்ளன. இக்கட்டிடங்களுக்கு மையப்பகுதியில் ஒரு ரேஷன் கடை உள்ளது. அந்த ரேஷன் கடை கட்டிடம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. எனவே  கட்டிடம் ஆங்காங்கே சிதிலமடைந்துள்ளது. மேலும் மழை நேரங்களில் ஒழுகும் மழைநீர் மக்களுக்காக விநியோகிக்க வைக்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் நனைந்து வீணாகிறது.

இதனால் இந்த ரேஷன் கடை கட்டிடத்தின் எதிரில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் தற்போது இந்த ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு ரேஷன் பொருட்கள் வாங்கும் மக்களுக்கு போதிய வசதியில்லை எனவே, ரேஷன் பொருட்கள் வாங்க வரும் முதியவர்கள் வெயிலில் தலை சுற்றி கீழே விழும் அவலநிலை உள்ளது. இந்த ரேஷன் கடையை அகற்றிவிட்டு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்தோ  அல்லது பொது நிதியில் இருந்தோ மக்களுக்காக புதிய ரேஷன் கடை கட்டித் தரவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: