சாத்தான்குளம், ஆக.13: சாத்தான்குளம், நாசரேத் கல்வி வட்டார அளவிலான மாணவிகளுக்கான கபடி போட்டி நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் நடந்தது. இதில் சூப்பர்சீனியர் பிரிவில் சாத்தான்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் பரிசும், ஜூனியர் பிரிவில் இரண்டாம் பரிசும் பெற்றனர்.