கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல திருவிழாவில் நற்கருணை பவனி

கோவில்பட்டி, மே 7: கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல திருவிழா, கடந்த 26ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு திருத்தல வளாகத்தில் அமைந்துள்ள திருப்பலி பீடத்தில் வைத்து மேல இலந்தைகுளம் பங்குதந்தை ஜெயபாலன் அடிகளார், கோவில்பட்டி உதவி பங்குதந்தை அந்தோணிராஜ் அடிகளார், காமநாயக்கன்பட்டி உதவி பங்கு தந்தை செல்வின் அடிகளார் ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலி நிறைவேற்றி 15 பேருக்கு புதுநன்மை வழங்கினர். தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருச்சி இறையியல் கல்லூரி பேராசிரியர் அந்தோணிராஜ் அடிகளார், கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல உதவி பங்குதந்தை அந்தோணிராஜ் அடிகளார் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நற்கருணை வைக்கப்பட்டு காலையில் புதுநன்மை வாங்கியவர்கள் வெண்ணிற ஆடை அணிந்து மலர்கள் தூவிய வண்ணம் பவனியில் முன் செல்ல, இறைமக்கள் ஜெபம் செய்தவாறு புதுரோடு, சாத்தூர் ரோடு வழியாக திருத்தலம் வந்து சேர்ந்தனர். தொடர்ந்து திருத்தலத்தில் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்று, கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது. அதன்பிறகு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

The post கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல திருவிழாவில் நற்கருணை பவனி appeared first on Dinakaran.

Related Stories: