முத்துமாலை அம்மன் கோயில் தல வரலாறு

முக்கூடல் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் அந்த காலத்தில் குரங்கனியில்உள்ள முத்துமாலைஅம்மனை வழிபட்டு வந்தனர். அக்காலத்தில் கொள்ளையர் இடையூறு அதிகமாக இருந்ததால் குரங்கனி சென்று வழிபட மக்கள்  பயந்தனர். அதனால் முக்கூடல் இந்து நாடார் சமுதாயத்தைச் சார்ந்த பெரியவர்கள்சேர்ந்து குரங்கனி முத்துமாலை அம்மன் கோயிலில் இருந்து பிடிமண் கொண்டு வந்து முக்கூடல் தாமிரபரணி வடக்கரையில் குடில் அமைத்து அம்பாளை வழிபாடு செய்து வந்தனர். அக்காலத்தில் சலவைத்தொழிலாளர்கள் துணிகளை துவைத்த பின்பு மண் தாழிகளை மணல் மீது கவிழ்த்து வைத்து மறுநாள் எடுப்பது வழக்கம். ஒரு நாள் அவ்வாறு எடுக்கும் போது ஒரு தாழியை எடுக்க முடியவில்லை. இந்த அதிசயம் எல்லோருக்கும் ஆச்சர்யத்தை எற்படுத்தியது.அன்று இரவு கோயில் பூசாரி மாடக்கண் நாடார் கனவில் அம்மன் தோன்றி, தாழியை எடுக்க வேண்டாம். அங்கு நான் இருக்கிறேன் அதைச்சுற்றி கோயில் கட்டி வழிபடுங்கள் என்று கூறியதால் அவ்வாறு கோயில் கட்டி வழிபாடு செய்தனர். இன்றும் கர்ப்பகிரஹத்தில் அம்பாள் அருகே உள்ள தாழிக்கும் பூஜை நடைபெறுகிறது.

சிலை வரலாறு: சிலகாலம் கழித்து அம்பாளுக்கு சிலை அமைக்க முடிவு செய்தனர். அப்போது கோயில் பூசாரி மாடக்கன் நாடார் கனவில் அம்பாள் தோன்றி பக்கத்தில் உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தில் மேற்கு பகுதியில் குறிப்பிட்ட ஒரு வயலில் எனது சிலை புதைந்துள்ளது. அங்கு சென்றால் வானத்தில் கருடன் வட்டமிட்டு நிழல் காட்டும் இடத்தில் தோன்டினால் சிலை கிடைக்கும் என்று கூறியது. அதே சமயத்தில் வயல் சொந்தக்காரர்கனவில் அம்பாள் தோன்றி வயலை தோன்டி சிலை எடுப்பதை தடை செய்ய வேண்டாம் என்று கூறியது. அம்மன் சொன்னபடி கருடன் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து தற்போது வழிபட்டு வரும் கருங்கல் சிலை சுயம்புவாக கிடைத்தது. அந்த சிலையை பூஜை செய்து பக்தியுடன் முக்கூடலுக்குகொண்டு வந்து மண்தாழிக்கு அருகில் சிலையை வைத்து ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.

முக்கூடல் இந்துநாடார் மக்கள் இக்கோயிலை 150 ஆண்டுகளுக்கு மேலாகநடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

இன்று பத்தாம் திருநாள் விழாமுக்கூடல் தாமிரபரணி நதிகரையில் அமைந்துள்ள முத்துமாலையம்மன்  கோயில் ஆனித்திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கியது. விழாவில் தினமும் காலையில் செம்புகுட்டி சிவில் பவனியும்,மதியம் சிறப்புபூஜையும், அன்னதானமும், மாலை யானைமீது தீர்த்தவாரியும்,இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாள் பவனியும் தொடந்து பக்திமற்றும் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்று வருகிறது. 8ம் திருவிழாவான நேற்று முன்தினம்  பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. 1 முதல் 9 திருவிழாநேற்று வரை  கலை நிகழ்ச்சிகள் ஹரிராம்சேட் கலையரங்கத்திலும் இன்று நாளை 10,11 ம் திருவிழா நிகழ்ச்சிகள் தாமிரபரணி நதிக்கரையிலுள்ள கோயில் வளாகத்திலும் நடைபெறும்.

நேற்று ஒன்பதாம் திருநாள்  மதியம் சிறப்பு பூஜையும் மாலை தீர்த்தவாரியும் இரவு அம்பாள் சப்பர பவனியும் நடந்தது. பத்தாம் திருநாளான இன்று மதியம் சிறப்பு  பூஜை மற்றும் அன்னதானமும் மாலை சிறப்பு பூஜை  நடக்கிறது. இரவு இசை அமைப்பாளர் பரத்வாஜ் வழங்கும் இசை நிகழ்ச்சியும், கோயில் வளாகத்தில் சப்பர பவனியும் ,வாணவேடிக்கையும், அதிகாலை கொடி இறக்குதலும் நடைபெறுகிறது. நாளை 11ம் திருநாள் விழா நடக்கிறது.

Related Stories: