சங்கரன்கோவில், டிச.20: தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகனின் 103வது பிறந்தநாள் விழா சங்கரன்கோவிலில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ பங்கேற்று அலங்கரிக்கப்பட்டிருந்த பேராசிரியர் அன்பழகன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன், புளியங்குடி நகராட்சி சேர்மன் விஜயா சௌந்தரபாண்டியன், மாவட்ட பொருளாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, வெள்ளத்துரை, நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி கிழக்கு அந்தோணிசாமி, மேற்கு நாகூர்கனி, பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமிபாண்டியன், தேவதாஸ், மாரிச்சாமி, மகேஸ்வரி, பராசக்தி பேரூர் செயலாளர் குருசாமி, ரூபி பாலசுப்ரமணியம், மாரிமுத்து, மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் மாணவரணி உதயகுமார், மகளிரணி சிவசங்கரி, மாவட்ட மகளிரணி துணைத்தலைவர் அண்ணாமலை, மாவட்ட பிரதிநிதி முத்துக்குமார், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜராஜன், அன்சாரி, மணிகண்டன், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால், நெசவாளரணி கலைச்செல்வன், சார்பு அணி துணை அமைப்பாளர்கள் கிருஷ்ணலீலா, கற்பகம், தொமுச கிளை செயலாளர் சங்கர்ராஜ், ஜெயக்குமார், கார்த்தி, பாரதிராஜா, மாரியப்பன், இஸ்மாயில், ஓய்வுபெற்ற தாசில்தார் சூரியநாராயணமூர்த்தி, நாட்டுப்புற கலைஞர்கள் சங்க தலைவர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
