நெல்லை, டிச.23: எஸ். தங்கப்பழம் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக்கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் புளியங்குடி புனித மீட்பர் தேவாலயத்தின் உதவி பங்குத்தந்தை ஜோ மார்ஷ் லியோ எஸ்.ஜே. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களிடையே கிறிஸ்துமஸ் திருவிழாவின் மகத்துவம் பற்றி பகிர்ந்து கொண்டார். மேலும், மாணவர்கள் சிறப்பாக அமைத்த கிறிஸ்துமஸ் குடிலை பாராட்டினர் மேலும் மாணவர்களின் நலனுக்காக சிறப்பு பிரார்த்தனையும் மேற்கொண்டார்.இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் கிறிஸ்துமஸ் விழா தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பாடல்கள், நாடகங்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன. இந்நிகழ்வை கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ.ஜே. ரத்னப்ரகாஷ் மற்றும் சிஇஓ டாக்டர் பாரதி ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தினர்.விழாவின் நிறைவாக அனைவருக்கும் கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது. கிறிஸ்துமஸ் விழா மாணவர்களிடையே மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் அன்பின் உணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது.
எஸ்.தங்கப்பழம் இயற்கை மருத்துவ கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா
- கிறிஸ்துமஸ் நாள்
- பனை இயற்கை மருத்துவக் கல்லூரி
- நெல்லா
- மாதுளை இயற்கை மருத்துவக் கல்லூரி
- யோகா
- ஜோ மார்ஷ் லியோ எஸ்.ஜே.
- கிறிஸ்துமஸ்
