பாவூர்சத்திரம்,டிச.20: மாறாந்தை செயிண்ட் அசிசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் யோகா போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர். தென்னிந்திய அளவிலான திறந்தவெளி யோகா போட்டி குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் மாறாந்தை செயிண்ட் அசிசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். இதில் 9ம் வகுப்பு மாணவர்கள் சுதிப் சிங், பவின் கிஷோர் ஆகியோர் தென்னிந்திய திறந்த வெளி யோகா போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் அந்தோணி சேவியர், முதல்வர் தமிழ்செல்வி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் வெகுவாக பாராட்டினர்.
தென்னிந்திய அளவிலான யோகா போட்டி அசிசி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை
- தென்னிந்திய அளவிலான யோகா போட்டி
- அசிசி மெட்ரிகுலேஷன் பள்ளி
- பவுர்சத்ரம்
- மாரந்தை
- செயின்ட்
- அசிசி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
- தென்னிந்திய அளவிலான திறந்த யோகா போட்டி
- குற்றாலம்
- கல்யாணர்
- அரங்கம்
