மாடியில் இருந்து தவறி விழுந்து அனல் மின்நிலைய பொறியாளர் மகன் பலி

தூத்துக்குடி, டிச. 27: தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆதிலிங்கம். இவர், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் ராஜா கார்த்திக் (23). பட்டதாரியான இவர், கடந்த 24ம் தேதி இரவு நடந்த கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்தை பார்த்துவிட்டு, தனது நண்பரான சுப்பையாபுரத்தை சேர்ந்த கிரி என்பவருடன் நள்ளிரவு அவரது வீட்டில் தங்கியுள்ளார். அப்போது இரவில் மாடி சுவரில் அமர்ந்திருந்த ராஜா கார்த்திக் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர், நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தென்பாகம் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: