சங்கரன்கோவில் அருகே குளத்தின் கொள்ளளவை அதிகரிக்க கோரி தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு

தென்காசி,டிச.23: சங்கரன்கோவில் அருகே பட்டாடைகட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சுமதிகனகவேல் தலைமையில் வென்றிலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கையில் பதாகைகளுடன் தென்காசி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பட்டாடைகட்டி ஊராட்சி வென்றிலிங்கபுரம் கிராமத்தில் சிங்கத்துக்குளம் அமைந்துள்ளது. குளம் சம்பந்தமாக கட்டுமான பணிக்கு ஊராட்சியின் தொழில்நுட்ப வல்லுநர்கள் அனுமதி பெற்று குளத்தை அளந்து பின்னர் கட்டுமான பணியை மேற்கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுவரை கொள்ளளவு விவரம் கிடைக்கவில்லை. குளம் சம்பந்தமாக பல்வேறு கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே சிங்கத்துக்குளத்தை அளந்து அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். சியா புகார் மனு அளித்தார்.

Related Stories: