கோவில்பட்டி, டிச. 27: இலுப்பையூரணி ஊராட்சியில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்குரிய இடங்களை அளந்து தர வலியுறுத்தியும், அந்த இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை அகற்றக்கோரியும் பொதுமக்கள் அதிமுகவைச் சேர்ந்த கனகசுந்தரம், மருதம் மூவேந்தர் முன்னேற்றக் கழக நிறுவனர் அன்புராஜ் தலைமையில் நேற்று சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின் னர் அவர்கள், சப்-கலெக்டர் ஹூமான்சூ மங்களை சந்தித்து முறையிட்டனர். அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். தொடர்ந்து அவர்கள், தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று, தனி தாசில்தாரை சந்தித்தனர். பின்னர் இலவச பட்டா வழங்க தேர்வு செய்யப்பட்ட இடங்களை வருவாய்த்துறை நேரில் சென்று அளந்து தரும் பணியில் ஈடுபட்டனர்.
சப்-கலெக்டர் ஆபீசை பொதுமக்கள் முற்றுகை
- துணை கலெக்டர் அலுவலகம்
- கோவில்பட்டி
- கனகசுந்தரம்
- அஇஅதிமுக
- மருதம் மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
- அன்புராஜ்
- இலுப்பையூரணி பஞ்சாயத்து
