இந்து மக்கள் கட்சி கோரிக்கை பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு மலர் வளையம் வைத்து நூதன ஆர்ப்பாட்டம்

காரைக்கால், ஜூன் 21: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வுக்கு காரணமானமத்திய அரசை கண்டித்து காரைக்காலில் சிலிண்டருக்கு மலர் வளையம் வைத்து  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து காரைக்கால் பழைய ரயில்வே நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமை வகித்தார். மூத்த நிர்வாகிகள் பிச்சையன், கலியமூர்த்தி முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் அந்தோணி, மாவட்ட நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், குமார், பக்கிரிசாமி, சிங்காரவேலு கண்டன உரையாற்றினர்.

மாநிலக்குழு உறுப்பினர் அந்தோணி பேசியதாவது: மத்திய பாஜக அரசு பதவியேற்று 4 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கையை திணறடிக்கும் வகையில் அவ்வப்போது பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையை கட்டுப்பாடின்றி உயர்த்தி வருகிறது. இதனால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் மத்திய அரசு அக்கறை காட்டாமல் பெரும் முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் கஜானாவை உயர்த்துவதிலேயே குறியாக உள்ளது. எனவே பெட்ரோல், டீசல் காஸ் விலை உயர்வை உடனே கைவிட வேண்டும் என்றார். முன்னதாக காஸ் சிலிண்டருக்கு மலர்வளையம் வைத்து கட்சியினர் ஒப்பாரி வைத்தனர்.

Related Stories: