உதகையில் ஏப்.15 முதல் சிறப்பு மலை ரயில் இயக்கம்

மேட்டுப்பாளையம்: ஊட்டியில் தற்போது குளுகுளு சீசன் துவங்கியுள்ளதாலும், கல்வி நிறுவனங்களுக்கு  கோடை விடுமுறை அளிக்க உள்ளதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். இந்நிலையில், மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஏப்.15ம் தேதி முதல் ஜூன் 24ம் தேதி வரை 11 ட்ரிப் சனிக்கிழமைகளிலும், மறுமார்க்கமாக ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வரும் ஏப்.16 முதல் ஜூன் 25ம் தேதி வரை 11 ட்ரிப் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 9.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் இந்த சிறப்பு மலை ரயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது. அதேபோல், ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்படும் மலை ரயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடைகிறது.

Related Stories: