கொலையா... தற்கொலையா...! சாத்தூரில் திகில் ஏற்படுத்திய மண்டை ஓடு: போலீசார் மீட்டு விசாரணை

சாத்தூர்: சாத்தூர் அருகே, சாலையோரம் மண்டை ஓட்டுடன் எலும்புக்கூடு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த எலும்புக்கூட்டை மீட்ட போலீசார், கொலை செய்து புதைக்கப்பட்டவரின் எலும்புக்கூடா அல்லது தற்கொலை செய்தவரின் எலும்புக்கூடா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தூர்-நெல்லை நான்கு வழிச்சாலையில் எட்டூர்வட்டம் அருகே, சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இதன் அருகே கிழக்கு பகுதியில் சாலையோரம் நேற்று மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு கூடு கிடந்தன.

அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பார்வையிட்டனர். கொலை செய்து சாலை அருகே புதைத்து வைத்திருந்தவரின் எலும்புக்கூடா அல்லது தற்கொலை செய்தவரின் எலும்புக்கூடா என விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களையும் சேகரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: